ஹட்டன் பகுதியில் காணாமல்போயுள்ள சிறுவன்: உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை
வத்தளை பகுதியை சேர்ந்த ரமேஷ் தனுஜன் என்ற சிறுவனை ஜனவரி 31ஆம் திகதி மாலை 6 மணியிலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன், கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடையவர் ஆவார்.
இந்நிலையில், அச்சிறுவன் பாடசாலை விடுமுறையை கழிப்பதற்காக ஹட்டன் பிரதேசத்தில் இருக்கும் சித்தி வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயுள்ளார்.
இவர் சம்பந்தமாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவனின் தோற்றம்
இவர் கருமை நிறம், நான்கரை அடி உயரம் கொண்ட தோற்றத்தை உடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரைக் கண்டால் கீழ் உள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு சிறுவனின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0777747157
0772773255
0765772460
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
