கொழும்புக்கு சைக்கிளில் செல்ல முயற்சித்த 10 வயது சிறுவன் : பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கை

Child Rehabilitation Center Ampara Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Farook Sihan Jun 23, 2023 09:43 AM GMT
Report

கொழும்பில் வேலை செய்கின்ற தனது தந்தையை பார்ப்பதற்கு  சைக்கிளின் மூலம் செல்ல முயன்ற சிறுவனை  கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது இன்று (23.06.2023) அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் இடம்பெற்றறுள்ளது.

குறித்த 10 வயதுடைய சிறுவன் தனது தாயாருக்கு தெரியாமல் வீட்டை விட்டு அதிகாலை சைக்கிளில் வெளியேறியதுடன் அக்கரைப்பற்று நகருக்கு சென்று பின்னர் பேருந்து ஊடாக கல்முனை பகுதிக்கு வந்து தனியாக நடமாடி திரிந்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான செயற்பாடு

கொழும்புக்கு சைக்கிளில் செல்ல முயற்சித்த 10 வயது சிறுவன் : பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கை | Boy Left Home Alone Ampara Police Action

இவ்வாறு தனியாக ஒரு சிறுவன் பெரிய பாடசாலை பையுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதை அவதானித்த ஆட்டோ சாரதி ஒருவர் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸ் குழு அச்சிறுவனை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து அச்சிறுவன் தனது தந்தை கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதாகவும் அவரை பார்ப்பதற்கு துவிச்சக்கரவண்டியில் அங்கு செல்வதற்கு தயாரானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் ஆலோசணை 

இந்நிலையில் உடனடியாக குறித்த சிறுவனிடம் தகவல்களை பெற்ற பொலிஸார் சிறுவனின் தாயாரை அழைத்து சிறுவனை ஒப்படைத்துள்ளதுடன் சிறுவனுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.

கொழும்புக்கு சைக்கிளில் செல்ல முயற்சித்த 10 வயது சிறுவன் : பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கை | Boy Left Home Alone Ampara Police Action

இவ்விடயம் தொடர்பில் சிறுவனின் தாயாரும் சிறுவனை மிக அக்கறையுடன் பார்த்துக்கொள்வதாக பொலிஸார் முன்னிலையில் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக நாட்டில் சிறுவர் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் பெற்றொர்கள் தத்தமது பிள்ளைகளில் அக்கறையுடன் கண்கானிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US