கொழும்பில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்
கொழும்பு, பேலியகொட பகுதியில் வீடொன்றுக்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதுடன், தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் களனி, நாரம்மினிய வீதியில் வசிக்கும் 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு
தனிப்பட்ட தகராறு காரணமாக சிலரால் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கொட்டுகச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam