யாழில் 15 வயது சிறுமியை கடத்திய சிறுவன் கைது
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (20.02.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என நேற்று முன்தினம் (18) ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சிறுவனது வீட்டிற்கு விரைந்து சிறுமியை மீட்டதுடன் சிறுவனை கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
