யாழில் காதலி உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் காதலன் எடுத்த விபரீத முடிவு
யாழில் காதலி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்து 50ஆவது நாளில் காதலனும் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில், குறித்த இளைஞன் அவரது இல்லத்தில் வைத்து தவறான முடிவெடுத்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri