பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சோகம் - பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
தென்னிலங்கையில் கடற்கரைக்குச் சென்ற இளைஞன் ஒருவர், கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காலி, கராந்துவ பகுதியைச் சேர்ந்த அச்சிர சனேஸ் சமரசேகர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது 20ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக உறவினர்களுடன் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை கைது செய்ய உத்தரவு..! சர்வதேச பிடியாணையில் அதிரடியாக களமிறங்கும் அதிகாரிகள்
உயிரிழந்த இளைஞன்
மரண விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம் அளித்த உயிரிழந்த இளைஞனின் தந்தை “எனக்கு நான்கு பிள்ளைகள். உயிரிழந்தது எனது கடைசி மகன். அவர் கடந்த 29 ஆம் திகதி தனது 20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அதனை கொண்டாடுவதற்காக நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம். அங்கு மகன் உறவினர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டது.

அதைப் பிடிக்கச் சென்ற மகன் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற மேலும் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட போதிலும், பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.
ஆனால் எனது மகனை எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது. மகன் உயிரிழந்த இடத்திலேயே மறுநாள் அவரது சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.
நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை வைத்திய அதிகாரி பபசரா குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 மணி நேரம் முன்
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam