மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் மரணம்
மட்டக்களப்பில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று(18) மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் சிறுவன் பயணித்துக் கொண்டிருக்கும் போது முச்சக்கரவண்டி சாரதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்தைக் கடந்து செல்லும் போது முச்சக்கரவண்டியில் இருந்த சிறுவன் சிறிய உழவு இயந்திரத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் உயிரிழந்தவர் காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய சிறுவன் ஆவார்.
சிறுவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




