விபத்தில் இளைஞன் பலி : தொடருந்தை மறித்து நிறுத்திய மக்கள்
சிலாபம் - புத்தளம் தொடருந்து பாதையில் புலிச்சாகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையில் மோட்டார் சைக்கிளுடன் தொடருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் தொடருந்தை நிறுத்தி தண்டவாளத்தை கடந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, புளிச்சாகுளத்தை சேர்ந்த 19 வயதுடைய மொஹமட் அஸ்லம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொடருந்து கடவை
விபத்தின் பின்னர் தொடருந்தானது புத்தளம் சென்று மீண்டும் சிலாபம் நோக்கி வந்துக் கொண்டிருந்த போது பிரதேசவாசிகள் புலிச்சகுளம் நிலையத்திற்கு அருகில் மறித்து நிறுத்தியுள்ளனர்.

அங்கு, பாதுகாப்பற்ற தொடருந்து கடவை குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam