விபத்து குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞன் மறுநாள் விபத்தில் மரணம்
தான் நேரில் கண்ட மோட்டார் சைக்கிள் விபத்து குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மறுநாள் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கம்பஹா, ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான சாமிக பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி பமுனுகம, பகுதியில் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள சுவர் மற்றும் மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
வீதி விபத்து
அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றுமொருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமையும் மோசமாக உள்ளது. விபத்தில் உயிரிழப்பதற்கு ஒரு நாள் முன்பு, சாமிக பெர்னாண்டோ தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு இளைஞன் விபத்தில் இறப்பது குறித்தும், இறந்த இளைஞனின் தாயார் எவ்வாறு மிகவும் அதிர்ச்சியடைந்தார் என்பது குறித்தும் ஒரு குறிப்பை வெளியிட்டிருந்தார்.
அவரது உடல் பமுனுகம மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு சென்று உடலை அடையாளம் கண்டனர்.
உயிரிழந்த சாமிக பெர்னாண்டோவின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri