காய்ச்சல் ஏற்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த அவலம்!
காய்ச்சலும், வலிப்பும் ஏற்பட்ட சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.
கொல்லன்குளம் - வீரன்குளம், மன்னார் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து நித்தியாஸ் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனுக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சலும், வலிப்பும் ஏற்பட்டது. பின்னர் 25ஆம் திகதி மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அன்றையதினமே குறித்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படாட்டான்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மரண விசாரணை
சிறுவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.