காதலியை சந்தித்து விட்டு திரும்பிய இளைஞன் பரிதாபமாக பலி
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுனுவில, கண்டிரிப்புவ பகுதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சிக்கடை, மனவேரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத செவன் எடம்பேல என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் இறந்த இளைஞர் காதல் உறவில் இருந்ததாகவும், தனது காதலியைச் சந்தித்துவிட்டு திரும்பி சென்ற போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளைஞன் பரிதாபமாக பலி
ரயிலில் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞன், 119 சுவசேரிய அம்புலன்ஸில் லுனுவில பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டாரா அல்லது விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையை மரண விசாரணை அதிகாரி நிரோஷன் குணசேகர நடத்த உள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        