இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்
மாத்தறை - திக்கொடை பிரதேசத்தில் இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இளைஞனின் வீட்டின் முன் வீதியில் இருந்து இன்று (07.07.2023) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய கவிந்து பெர்னாண்டோ என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
நண்பன் ஒருவரின் வீட்டுக்கு நேற்று மாலை பேருந்தில் சென்றிருந்த குறித்த இளைஞர், இன்று அதிகாலை வீடு திரும்புவதாகப் பெற்றோரிடம் தெரிவித்திருந்தார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவர் தனது வீட்டுக்கு முன் வீதியில் இருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீதி விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என்று கூறிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |