முதலை தாக்கிய சிறுவன் சடலமாக மீட்பு
சீகிரிய பிரதேசத்தில் உள்ள துன்னா பிந்தி நீர்த்தேக்கத்திலிருந்து ஏழு வயது சிறுவனின் சடலம் இன்று(16) மீட்கப்பட்டுள்ளது.
தனது தாய், தந்தை மற்றும் சகோதரியுடன் நேற்றைய தினம் நீராட சென்ற போது குறித்த சிறுவன் முதலையால் தாக்கப்பட்டு காணாமல் போயுள்ளார்.
சிறுவனைக் காப்பாற்ற அவரது தந்தை கடுமையாக முயற்சித்த நிலையிலும் அது தோல்வியடைந்துள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு
இதனையடுத்து, சிறுவனின் தந்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சீகிரிய பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சடலம் மீட்பு
சிறுவனின் சடலம் கடற்படையினரால் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், குளிப்பதற்கு பொருத்தமற்றது என்று பிரதேச மக்கள்களால் கூறப்படும் இடங்களில் குளிக்க வேண்டாம் எனவும் குறிப்பாக முதலைகள் உள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் குளிக்கும் போது பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



