புதுக்குடியிருப்பில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது (Photos)
புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று (29.12.2023) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உடமையில் வைத்து விற்பனை
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கைவேலி பகுதியிலுள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலைக்கு அருகாமையில் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது பொலிஸார் 8 பைக்கற்றுக்களில் 15 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்
குறித்த ஐஸ் போதைப்பொருள் 80,000 ரூபா பெறுமதியுடையது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உடமையில் போதைப்பொருளை வைத்து விற்பனை செய்ய தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான (70537) குணவர்த்தன, (72485) ஜெயசூர்ய, (90945) தனுஸ்ராஜு, (88582) ஜெனன் ஆகிய பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
