முல்லைத்தீவில் இளைஞன் கைது
புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து 1கிலோ 570 கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (25.11.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இரணைப்பாலை பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினுள் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இதன்போது, நபரின் வீட்டு அறையில் பொதி செய்யப்பட்ட வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 570 கிராம் கேரளா கஞ்சாவினை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மீட்டுள்ளனர்.
இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 27வயதுடைய இளைஞனை கைது செய்ததுடன் இவருக்கு எவ்வாறு கஞ்சா கிடைக்கப்பெற்றது, எங்கிருந்து கொண்டுவந்தார் போன்றவாறாக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
