காதல் உறவுக்கு சம்மதிக்காத பெற்றோர்கள்: இருவர் எடுத்த விபரீத முடிவு
காதல் உறவுக்கு பெற்றோர் சம்மதிக்காத காரணத்தினால் காதலர்கள் இருவர் ரம்பொட நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புஸ்ஸல்லாவ ரொச்சில்ட் வத்தையைச் சேர்ந்த இளைஞனும், பெரட்டாசி மேமலை பகுதியைச் சேர்ந்த யுவதியுமே நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
17 வயது நிரம்பிய இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் உறவுக்கு யுவதியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்த இளைஞன் காயங்களுடன் அருவியில் இருந்து மேலே வந்து நடந்த சம்பவத்தை அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு கம்பளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan