நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதி (Photo)
நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடலில் மிதந்த மர்ம பொதி
நெடுந்தீவு கடலில் மர்ம பொதி ஒன்று மிதப்பதாக இன்றைய தினம் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் குறித்த பொதியினை மீட்டு சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த பொதியிலிருந்து 35 பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களை மீட்கப்பட்டுள்ளன.
கடற்படையினரின் சந்தேகம்
இந்தியாவில் இருந்து இவற்றை கடத்தி வந்த நிலையில் கடற்படையினரை கண்டு கடத்தல்காரர்கள் பொதியினை கடலில் வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



