செய்தி ஊடகம் ஒன்றில் பணியாற்ற போரிஸ் ஜான்சன் முடிவு
முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஊடகம் ஒன்றில் பணியாற்றப்போவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜோன்சன், 2019-2022 ஆண்டுகளில் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.
இந்நிலையில் பிரித்தானியவின் முன்னணி செய்தி ஊடகம் ஒன்றில் அரசியல் நிகழ்வுகள் குறித்த விமர்சகர், நெறியாளராக பணியாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் புதிய தாக்குதல் வியூகம்....! அதிகரிக்கும் உயிரிழப்புகள்: பணயக்கைதிகளை விடுவிக்கமாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு
I’m very much looking forward to joining GB News https://t.co/D3bXVDlDss
— Boris Johnson (@BorisJohnson) October 27, 2023
டுவிட்டர் தளத்தில் கருத்து
இது தொடர்பாக போரிஸ் ஜோன்சன் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது, 2024 ஆண்டு முதல் வாயிலாக ரஷ்யா - உக்ரைன் போர், நடைபெற உள்ள பிரித்தானிய பொதுத்தேர்தல், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஆகிய நிகழ்வுகள் என அனைத்தையும் பற்றிய எனது பார்வைகளை நான் இந்த புதிய ஊடகத்துக்கு வழங்கப் போகிறேன்" என்றார்.
போரிஸ் ஜோன்சன் அரசியலில் ஈடுபடுவதற்கு முன் பத்திரிகை துறைகளில் பணியாற்றியவர் என கூறப்படுகிறது.

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
