இராஜாங்க அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் (PHOTOS)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவர் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருனாகரம், அப்பிரதேச அபிவிருத்தி இணைத்தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான பரமசிவம் சந்திரகுமார், போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆர். இராகுலநாயகி, மற்றும் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் யோ.ரஜனி, மற்றும் பிரதே சபைத் உறுப்பினர்கள், திணைக்கள மற்றும், அதிகார சபைகளின் அதிகாரிகள், கிராமிய மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, நீர்ப்பாசனம், விவசாயம், கமநல அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, மின்சாரம், நீர்வழங்கல், மீன்பிடி, வனபரிபாலனம், வன ஜீவராசிகள், கால்நடை, போக்குவரத்து, வீடமைப்பு, விளையாட்டு, கிராமிய அபிவிருத்தி, சமூர்த்தி, புவிச்சரிதவியல், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக்காக இவ்வருடம் 182.750 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் நிலவும், ஆசிரியர் பற்றாக்குறை, குடிநீர் பிரச்சனை, தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பான விடையங்கள், அப்பிரதேசத்தில் தற்போது வரைக்கும், 42 வீதம் வூஸ்ட்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதை துரிதப்படுத்தல், பிறப்பு வீதம், சத்துணவு, மின்சார இணைப்பு வசதிகளைத் துரிதப்படுத்தல், பிரதேசத்தில் தங்கி நிற்கும் காட்டு யானைகளைத் அப்புறப்படுத்தல், வீடுகட்டும் பயனாளிகளுக்கு குறைந்த விலையில் மண் அனுமத்திப்பத்திரம் வழங்கல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.











