இந்தியாவில் இன்றும் 20க்கு மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
இந்தியாவில் இன்று 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இண்டிகோ, விஸ்தாரா, எயார் இந்தியா மற்றும் ஆகாசா எயார் போன்ற சர்வதேச விமானங்களும் வெடிகுண்டு மிரட்டல்களைப் பெற்ற விமான நிறுவனங்களில் அடங்குகின்றன.
இதில், இண்டிகோ, விஸ்தாரா மற்றும் எயார் இந்தியா, விமானங்களில் தலா 6 விமானங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் அச்சுறுத்தல்
ஜெட்டா, இஸ்தானாபுல், பிராங்போட், சிங்கப்பூர், போன்ற இடங்களுக்கு பயணித்த விமானங்களே இந்த அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளன.
இந்தநிலையில், நெறிமுறைகளுக்கு இணங்க, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக இந்த அச்சுறுத்தல் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்தும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையிலும் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்தே, நேற்று இலங்கைக்கு வந்த இந்திய விமானம் ஒன்றுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 43 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
