“நீதியை நோக்கிய யாதார்தங்களும் வெளிப்பாடும்”நூல் வெளியீடு (Photos)
பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின், ஸ்தாபக பொது செயலாளர், ச.வி. கிருபாகரனினால் வெளியிடப்பட்ட “நீதியை நோக்கிய யாதார்தங்களும் வெளிப்பாடும்” (Reaching TowardsJustice) என்று பெயரிடப்பட்ட ஆங்கில, தமிழ் வெளியீடுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 18ம் திகதி வெள்ளிகிழமை, ஜெனிவாவில் பல தரப்பட்ட சர்வதேச செயற்பாட்டாளர்களின் ஒழுங்கமைப்பிற்கு அமைய, “பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச மையம்” என்ற அமைப்புடன் இணைந்து பல அமைப்புக்கள் நடத்திய ஒன்று கூடலில், பல பிரபல்யாமான ஐ.நா.செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் இந் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு , முன்னாள் ஜெனிவா அமெரிக்க தூதுவரலாயத்தின் பிரதான உத்தியோகத்தரும், வழங்கறிஞருமான ஏரிக் றிச்சாட்சன் தலைமை தாங்கி வைப்பவத்தை நடத்தியுள்ளார்.
இந்நூல் வெளியீட்டு வைபத்தில் ‘றாடோ’ என்ற ஆபிரிக்க அமைப்பின் ஐ.நா. பிரதிநிதியும், ஆபிரிக்க அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளருமான பிறோ டயவாரா உரையாற்றுகையில்,
கிருபாகரனுடன் கடந்த இருபத்தைந்து வருடங்களாக தாம் இணைந்து ஐ.நா. மனித உரிமை செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், கிருபாகரனின் இந்நூல் வெளியீடு சர்வதேச மட்டத்தில் மிகவும் வரவேற்க தக்க விடயமெனவும், தான் அறிந்த வரையில் கிருபாகரனின் கடந்த இருபத்தைந்து வருடத்திற்கு மேலான மனித உரிமை செயற்பாடு சாதனைகள் சோதனைகள் நிறைந்தவையென குறிப்பிட்டிருந்தார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட, ஐ.நா.மனித உரிமை செயற்பாடுகளின் தமிழ் முன்னோடிகளில் ஒருவரான, சுவிஸ்லாந்தின் லோசன் மாநிலத்தின் மாநாகர சபை உறுப்பினர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் , நூல் வெளியீட்டளரான ச.வி.கிருபாகரனிற்கு பொன்னடை போர்த்தி கௌரவித்தார்.
இதன்போது நூல் உரிமையாளர் கிருபாகரன் உரையாற்றுகையில்,
இந்நூல் வெளியீடு என்பது தனது முப்பது வருடங்களிற்கு மேலான அனுபவம், கல்வி, அயராத உழைப்பு, தொடர்ச்சியான வேலைத்திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை என்பதுடன், அரசியல் அவமானம், எரிச்சல், பொறாமை போன்ற விடயங்களை உள்ளடக்கியவை என குறிப்பிட்டிருந்தார்.
இவ் விழாவில், சர்வதேச வழங்கறிஞர்கள், கல்விமான்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன், சுவிஸ்லாந்தின் வேறுபட்ட மாநிலங்களை சார்ந்த தமிழ் செயற்பாட்டாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
