2021 புக்கர் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ள இலங்கை நாவலாசிரியரின் நூல்
இலங்கை நாவலாசிரியர் அனுக் அருட்பிரகாசத்தின் "ஏ பெஸேஜ் நோர்த்" என்ற நூல், 2021 "புக்கர்" பரிசுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் புக்கர் பரிசுக்கான ஆறு நாவல்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதி ஆறு நூல்களில் "இதைப் பற்றி யாரும் பேசவில்லை" என்ற அறிமுக நாவலாசிரியர் பெட்ரிசியா லோக்வுட்டும் உள்ளடங்குகிறார்.
2021, நவம்பர் 3 ஆம் திகதி பிபிசி வானொலி அரங்கில் இடம்பெறும் பரிசளிப்பு விழாவில் நடுவர்கள் வெற்றிப்பெற்ற நூலை வெளிப்படுத்துவார்கள்.
அனுக் அருட்பிரகாசம் விருது பெற்ற இலங்கை நாவலாசிரியர் ஆவார், அவரது இரண்டாவது நாவலான "ஏ பேசேஜ் நோர்த்" 2021 புக்கர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது முதல், ஒரு கதையான "சுருக்கமான திருமணம்" தெற்காசிய இலக்கியத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது.
அருட்பிரகாசம் அமெரிக்காவில் தத்துவம் பயின்றார், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது புலம்பெயர்ந்த தாய்மார் மற்றும் மகள்மார் தொடர்பான நாவலை எழுத்துகின்றார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
