நாட்டில் நூல்கள் விற்பனையில் வீழ்ச்சி
நாட்டில் நூல்கள் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க தெரிவித்துள்ளார்.
நூல்கள் மீது வெட் வரி விதிக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு நூல்களின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நூல்களின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
[DHFRNPW ]
புதிதாக நூல்கள் வெளியீடு
மேலும் புதிதாக நூல்கள் வெளியீடு செய்யப்படுவதும் குறைந்துள்ளது என தினேஸ் குலதுங்க தெரிவித்துள்ளார்.
சில பதிப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் நன்றாக விற்பனை செய்யப்பட்ட நூல்களும் தற்பொழுது மீள் பிரசூரத்திற்காக அச்சிடப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வெற் வரிவிலிருந்து நூல்களுக்கு விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் இந்த யோசனையை உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நூல் அச்சிடுவதற்கான அனைத்து மூலப் பொருட்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதற்கான வரிகள் செலுத்தப்படுவதாகவும், அதற்கு மேலதிகமாக வெற் வரியை விதிப்பது நியாயமற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
