இது பொம்மை அல்ல! திரைப்படத்தை பார்த்து கண் கலங்கிய பார்வையாளர்
ஈழத்தமிழர்களின் உணர்வுகளை கலை வடிவில் உயிர்ப்பிக்கும் வகையில் பொம்மை திரைப்படம் வெளியாகியிருந்தது.
ஐபிசி தமிழின் தயாரிப்பிலும், நவயுகா குகராஜாவின் உணர்ச்சி பூர்வமான இயக்கத்திலும் உருவான இந்த திரைப்படம், கடந்த காலத்தை வெறும் கதையாக அல்லாமல், வாழ்ந்த அனுபவமாகவே பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
2025 செப்டம்பர் 19ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்த படைப்பு, தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த உணர்வின் தொடர்ச்சியாக, இத்திரைப்படம் தமிழகத்தில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
இதன்போது, குறித்த திரைப்படம் பொம்மை அல்ல இது ஒரு உண்மையான காட்சி என இந்த சிறப்பு காட்சியை பார்த்து வெளியே வந்த பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு காட்சியை பார்த்து வெளியே வந்த பார்வையாளர்கள், தங்கள் உணர்வுகளையும் கருத்துக்களையும் பின்வருமாறு பகிர்ந்து கொண்டனர்,
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening