ஐபிசி தமிழ் பெருமையுடன் வழங்கும் பொம்மை திரைப்படம்! செப்டம்பர் 19முதல் திரையரங்குகளில்
IBC தமிழின் தயாரிப்பில் பொம்மை திரைப்படம் முழுக்க முழுக்க நமது கலைஞர்களின் நடிப்பில் உருவாகி படப்பிடிப்பின் பின்னரான அனைத்து வேலைகளும் தமிழ் நாட்டில் முடிக்கப்பட்டு இம்மாதம் 19 ம் திகதி திரைக்கு வருகிறது.
பொம்மையின் படத்தொகுப்பை மாருதி.Kவும், சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத் தொகுப்புக்கான விருதுகள் உட்பட ஐந்து இந்திய தேசிய திரைப்பட விருதுகளையும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், கேரள அரசு திரைப்பட விருதுகள் போன்றவற்றில் பல விருதுகளையும் வென்று குவித்துள்ள பி. லெனின் பொம்மை திரைப்படத்தின் படத் தொகுப்பு மேற்பார்வையைச் செய்திருப்பது, ஒரு ஈழத்துப் படைப்பின் மேல் அவருக்கு இருந்த நம்பிக்கையையும் ஆர்வத்தைக் காட்டுகிறது.
பொம்மை திரைப்படம்
நாலு பொலிசும் நல்லா இருந்த ஊரும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் M. ரஜனிகாந்த பொம்மை திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். SFX C.சேதுவால் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கிறது.
பிகில், மெர்சல், லகான் போன்ற பல பிரபலத் திரைப்படங்களுக்கு SFX மூலம் திரைக்கதைக்கு வலு சேர்த்தவர் பொம்மை திரைப்படத்தையும் மெருகூட்டியிருக்கிறார்.
ஒலி வடிவமைப்பை C.K பூபதிராஜா , டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தின் இயக்குநரும் பரடைஸ் திரைப்படத்தின் முதன்மைத் நிர்வாகத் தயாரிப்பாளருமான விக்கி, முதன்மை நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள்.
சினிமா மேல் இவர்கள் வைத்திருக்கும் அதீத நேசமும் ஈழத்துத் திரைப்படங்களின் தனித்துவம் குறித்த இவர்களது தெளிவான பார்வையும், மிகுந்த விருப்பத்தோடு பொம்மை திரைப்படத்திற்கு அவர்களது பங்களிப்பைக் கொடுக்கத் தூண்டியுள்ளது என்பது கண்கூடு.
நமது கலைகளை மெரு கூட்ட உதவும் தமிழ் நாட்டின் பிரபல கலைஞர்களுக்கு மிகுந்த நன்றியும் பாராட்டுக்களையும் கூறி மிகுந்த நெகிழ்வடைகிறது படக் குழு.
இயக்கம் - நவயுகா குகராஜா
ஒளிப்பதிவு - மதுனி ஹிரன்யா அழகக்கோன் , வற்சு
இசை - M.ரஜனிகாந்த்
படத்தொகுப்பு - மாருதி.K
தயாரிப்பு வடிவமைப்பு - ஜோசுவா ஹெபி
ஒலி வடிவமைப்பு - சிக பூபதிராஜா
முதன்மை நிர்வாகத் தயாரிப்பாளர் - விக்கி







