கனடா நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் - பொலிஸார் தீவிர விசாரணை
வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து எல்லை முகவர்கள் விடுத்த எச்சரித்ததையடுத்து, நாடாளுமன்றத்தை பல மணி நேரம் பூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து கனேடிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லை முகவரத்தின் உளவுப் பிரிவு சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வாகனங்களில் வெடிபொருட்கள் நிரப்பப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த எச்சரிக்கையினை தொடர்ந்து ஒட்டாவா காவல்துறை சனிக்கிழமையன்று, "இரண்டு வாகனங்கள் மற்றும் இரண்டு சந்தேக நபர்களை" அடையாளம் கண்டிருந்ததாக தெரிவித்திருந்தது. எனினும் குறித்த இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை விசாரிக்கும் ரோயல் கனடியன் மவுண்டட் காவல்துறையின் (RCMP) சிறப்பு ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்கக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அச்சுறுத்தலின் தீவிரம் தெரிவிக்கப்படவில்லை
"அச்சுறுத்தல் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை," என்று விசாரணை தரப்பினர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் செய்தியை RCMP உறுதிப்படுத்தவோ மறுக்கவோ மறுத்துவிட்டது. "தனியுரிமை மற்றும் செயல்பாட்டுக் காரணங்களுக்காக, குற்றவியல் விசாரணைகள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ அல்லது வெளியிடவோ இல்லை" என்று RCMP செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஒட்டாவாவின் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மூன்று வாரங்களாக நூற்றுக்கணக்கான ட்ரக்குகள் மற்றும் வாகனங்கள் அந்தப் பகுதியில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையால் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 15 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
