சிரிய தலைநகரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி - 16 பேர் படுகாயம்
சிரியா தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் (Cafe) ஒன்றில் இன்று நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்ததுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திற்கு மிக அருகில் உள்ள இந்த உணவகத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேசையின் அடியில் மறைத்து வைத்திருந்த வெடிபொருளை (IED) வெடிக்கச் செய்து தப்பியோடியுள்ளார்.
தீவிர சோதனை
சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவப் புலனாய்வு மற்றும் பொலிஸார் அப்பகுதியை முழுமையாக முடக்கி, மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் பாதுகாப்பு அமைச்சகக் கட்டடத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு டமாஸ்கஸில் அரங்கேறியுள்ள இந்த இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் சிரியாவில் கடுமையான பாதுகாப்புப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri