பாகிஸ்தான் தாக்குதலில் தொடரும் மர்மம்.. இந்தியாவின் சதிதிட்டமா..!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மாவட்ட நீதிமன்றத்தைத் தாக்க ஒரு குண்டுவெடிப்பாளர் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குண்டுவெடிப்பாளரை அடையாளம் காண்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பார்கள் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள்
மேலும், "இந்தியாவால் தீவிரமாக ஆதரிக்கப்படும்" தீவிரவாத குழுக்கள் இதில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும், இந்திய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று தெரிவித்து பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்திய பயங்கரவாதப் பிரதிநிதிகளால் பாகிஸ்தானின் நிராயுதபாணியான குடிமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் பாகிஸ்தானிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, பாகிஸ்தானில் உள்ள ஒரு அமைப்பான தலிபானிலிருந்து பிரிந்த குழுவான ஜுமாத் உல் அஹ்ரர், இதற்குப் பொறுப்பேற்றுள்ளதாக சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட போதும் தலிபானின் மத்தியத் தலைமை, குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தங்களுக்குச் செய்திகளை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போர் பதற்றம்
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் தற்கொலை குண்டுவெடிப்புகள் அண்மைய ஆண்டுகளில் அரிதாகவே இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
குண்டுவெடிப்பை ஏற்படுத்திய நபர், 15 நிமிடங்கள் வரை காத்திருந்த பிறகு, தாக்குதல் பொலிஸ் காருக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகின்றது.

இந்தியாவில் நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் இடம்பெற்றிருந்த வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பாகிஸ்தானில் பதிவான தாக்குதலுக்கு இந்தியா காரணமாக இருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
இது இந்திய - பாகிஸ்தானிய போர் பதற்றத்தை அதிகரிக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொள்ளுமாயின் அது பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி போர்பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan