இலங்கை முதலீட்டுச் சபை விடுத்துள்ள எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலியான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காணொளி குறித்து பொதுமக்களுக்கும் தொடர்புடைய தரப்புகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டு சபையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியில், பணிப்பாளர் சபை தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரேணுகா எம். வீரகோனின் உருவம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ரேணுகா கூறாத கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டு பொய்யான பிரசாரம் செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ முழுமையாக ஒரு முதலீட்டு மோசடி என இலங்கை முதலீட்டுச் சபை வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரப்பூர்வ தகவல்களை இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழிகளின் மூலம் மட்டுமே உறுதிப்படுத்துமாறும், இத்தகைய காணொளிகளை யாராவது பார்த்தால் உடனடியாக தெரிவிக்குமாறும் இலங்கை முதலீட்டுச் சபை அறிவுறுத்தியுள்ளது.
தவறான தகவல்கள் மற்றும் டிஜிட்டல் மோசடிகளிலிருந்து பாதுகாப்பது மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri