பொகவந்தலாவ நகரில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம்
பொகவந்தலாவ நகரில் முதன் முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ நகரை அண்டி கிட்டத்தட்ட 20இற்கும் மேற்பட்ட தோட்டங்கள் உள்ள நிலையில் தங்களது பிரதான தேவைகளைப் பூர்த்தி செய்ய பொகவந்தலாவ நகரையே அங்குள்ள மக்கள் நம்பியுள்ளனர்.
பெரும்பாலும் ஒரு சில தோட்டங்களுக்கு பொதுப் போக்குவரத்து வசதிகள் இருக்கின்றபோதும் பெரும்பாலான தோட்டப் பகுதிகளுக்கு பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமை பாரிய குறைபாடாகவே காணப்பட்டது.
இந்தநிலையில், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட சொந்த வாகனங்களையே தங்களது போக்குவரத்துக்கு அந்த மக்கள் நம்பியிருக்க வேண்டிய நிலையும் காணப்பட்டது.

எனினும், பல்லாயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் தேவைகளுக்காக நாடும் பொகவந்தலாவ நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று இல்லாமை மிகப் பெரிய குறைபாடாக காணப்பட்டது.
எரிபொருள் நிரப்புவதென்றால் அருகில் இருக்கும் நோர்வூட் நகரத்தையே நாட வேண்டிய நிலையும் உள்ளதோடு, வைத்தியத் தேவைக்காக, அவசரத் தேவைக்காக நகரத்தை நோக்கி செல்வோரும் இதன் காரணத்தினால் பாதிப்பை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையில், பொகவந்தலாவ நகரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான தேவை மிக அதிகமாகவே காணப்பட்டது.
இதன்படி, முதன் முறையாக பொகவந்தலாவ பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதி மக்களின் மிக முக்கியத் தேவை ஒன்றும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam