பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர் காயம்(Photo)
திருமண நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியில் கெம்பியன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பெண் ஒருவரும், சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளதாகவும், கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் வசிப்பவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ
பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
