5,000 அடி உயரத்தில் பறந்த போயிங் விமானத்திலிருந்து வந்த MAYDAY அவசர அழைப்பு
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று கடந்த வாரம் விண்ணில் பறந்தபோது மிக முக்கியமான தொழிநுட்ப கோளாறால் கடுமையான பதட்டத்திற்குள்ளாகியுள்ளது.
யுனைடட் ஏர்லைன்ஸ் இயக்கும் UA108 என்ற விமானம் ஜூலை 25ஆம் திகதி வோஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்திலிருந்து முனிக் நோக்கி புறப்பட்டபோது, இடது எஞ்சின் செயலிழந்துள்ளது.
“MAYDAY” என அவசர அழைப்பு
இதையடுத்து விமானக் குழுவினர் “MAYDAY” என அவசர அழைப்பு விடுத்தனர். விமானம் 5,000 அடி உயரத்துக்குச் சென்றவுடன் எஞ்சின் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானிகள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் (ATC) ஒருங்கிணைந்து பாதுகாப்பான தரையிறக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
FlightAware தரவுகளின்படி, இந்த விமானம் 2 மணி 38 நிமிடங்கள் வரை விண்ணில் இருந்தது. வோஷிங்டன் வடமேற்கே ஒரு சுற்றுப் பாதையில் (holding pattern) பறந்தபடியே பாதுகாப்பாக எரிபொருள் வெளியிடப்பட்டது.
விமானத்தில் பழுது
இந்தகாலப்பகுதியில், விமானிகள் 6,000 அடி உயரத்தில் எரிபொருள் வெளியிட அனுமதி கோரி ATCயிடம் வேண்டினர்.
விமானத்தின் எடையை சமநிலைப்படுத்த இதன் மூலம் உதவியது. மற்ற விமான போக்குவரத்துகளிடமிருந்து பாதுகாப்பாகப் பிரித்து எரிபொருள் வெளியிட கட்டுப்பாட்டு அதிகாரிகள் வழிகாட்டினர்.
எரிபொருள் வெளியீடு முடிந்தவுடன், விமானிகள் Runway 19 Centre வழியாக Instrument Landing System (ILS) மூலம் தரையிறங்க அனுமதி கோரியுள்ளனர்.
விமானம் தரையிறங்கியதும், இடது எஞ்சின் செயலிழந்ததால் அது சுயமாக நகர முடியாமல் போயுள்ளதால் இழுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி விபத்து
தற்போது அந்த விமானம் வோஷிங்டன் டல்லஸ் விமான நிலையத்தில் நிலைபெற்று நிற்கின்றது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
எஞ்சின் கோளாறு குறித்து யுனைடட் ஏர்லைன்ஸ் மற்றும் தொடர்புடைய விமானபோக்குவரத்து அதிகாரிகள் விரிவாக விசாரணை நடத்துகின்றனர்.
உரிய நேரத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 12ம் திகதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் இரட்டை என்ஜின் விமானம் விபத்தில் சிக்கியது.
இதைத்தொடர்ந்து போயிங் விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
