ஓடுபாதையில் திடீரென நிறுத்தப்பட்ட இன்டிகோ விமானம்: பதறிய பயணிகள் - கைகூப்பி நின்ற பெண் ஊழியர்
மும்பையில் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் புறப்படத் தாமதமானதால், பயணிகள் கடும் பதற்றமடைந்து விமானத்திற்குள் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்வதறியாது சிரமப்பட்ட விமான பணிப்பெண் ஒருவர், கையெடுத்துக் கும்பிட்டு அமைதியாக இருக்குமாறு கோரியுள்ளதுடன் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
மும்பையிலிருந்து வாரணாசிக்குச் செல்லும் இண்டிகோ விமானம் ஒன்று நேற்றிரவு புறப்படத் தயாராக இருந்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு
இருப்பினும், கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம் 2 மணிநேரம் தாமதமானது.
இதன் காரணமாக, விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் கோபத்தில் கத்தி கூச்சலிட ஆரம்பித்துள்ளனர்.
அதனால், அதிர்ச்சியடைந்த விமானப் பெண் பணியாளர்கள், அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். இந்த நிலையில், விமானப் பயணிகள், பெண் ஊழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
मुंबई से वाराणसी जाने वाली इंडिगो एयरलाइन की फ्लाइट तकनीकी कारणों से घंटों तक रनवे पर खड़ी रही. यात्रियों और क्रू-मेम्बर्स के बीच बहस हुई.वीडियो बनाने से मना किया गया. यात्री परेशान दिखे,, समाधान की स्पष्ट जानकारी नहीं दी गई..ll pic.twitter.com/GJ0SBlJN05
— 🇮🇳 Farhan Irakee . (@FarhanIrakee) July 27, 2025
இதனையடுத்து, குறித்த பெண் ஊழியர், விமானம் தாமதமாகப் புறப்படுவதற்கு, பயணிகளை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டவாறு மன்னிப்பு கேட்டுள்ளார்.
அச்சம்பவம் பதிவான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.





சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
