தலைமன்னாரில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடிதுறையை அண்டிய கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
மீன்பிடியில் வலையினால் சுற்றப்பட்ட நிலையில் இன்று திங்கட்கிழமை (17) காலை சடலம் கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கியுள்ள சடலம்
குறித்த கடற்கரை பகுதியில் உள்ள கடற்படையினர் சடலத்தை இன்று திங்கட்கிழமை (17) காலை அவதானித்து தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில் தலைமன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் மீட்கப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சடலம் தொடர்பாக தலைமன்னார் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்..! முன்னெடுக்கப்பட்டுள்ள கவனஈர்ப்பு போராட்டம்