திருமலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் சடலம் மீட்பு
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (20) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
நேற்று இரவு திருகோணமலை பாலையூற்று பிரதேசத்தில் தனது மனைவியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் முச்சக்கரவண்டியில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
திருகோணமலை சிங்கபுற பிரதேசத்தைச் சேர்ந்த ரவீந்திர வீரசிங்க (வயது 42) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடன் தொடர்பைப் பேணி வந்த நபர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        