தெனியாயவில் நீராட சென்று காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்பு
முதலாம் இணைப்பு
தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள 'கலேதொல' நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட நிலையில் இன்று (08) காலை இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் மேலும் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், காணாமல்போயிருந்த இறுதி இளைஞரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
தெனியாய- பெவரலிய பகுதியில் உள்ள 'கலேதொல' என்ற இயற்கை நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று (08.11.2026) மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடுதல் நடவடிக்கைகளின்போது, காலை இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் மேலும் ஒருவரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் நேற்று(07.11.2026) தெனியாய, பெவரலிய பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கைகள்
அங்கு அக்குழுவில் 6 பேர் கலேதொல பகுதியில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.

காணாமல்போனவர்களைத் தேடும் பணிக்காக கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
நீரில் மூழ்கி காணாமல்போயுள்ள மேலும் ஒரு இளைஞரை தேடி, தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.