யாழ்.வடமராட்சி கிழக்கில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(21.3.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நேற்றைய தினம் வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து அந்தப் பகுதி மக்கள் குறித்த வீட்டில் வசித்து வந்த நபர் சில நாட்கள் வெளியே நடமாடாத காரணத்தால் அவரது உறவினருக்கு அறிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, உடனடியாக உரிய இடத்திற்கு சென்ற உறவினர்கள் வீட்டினை திறந்து பார்த்த போது வீட்டில் வசித்த ஆண் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் முதல் கட்ட விசாரணையில் சடலமாக காணப்பட்டவர் செம்பியன் பற்று வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri