மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிருஸ்ணபிள்ளை ரதன் என்னும் 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்துகொண்டு திரும்பியவரே இவ்வாறு வாய்க்காலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் வலிப்பு நோய் உடையவர் என்றும் இதன் மூலமாகவே உயிரிழந்துள்ளார் என்பதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள பணித்தார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
