நீரில் மூழ்கிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளாற்றுக்கட்டு பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் ஓடும் நீரில் தவறி விழுந்து மூழ்கிய குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (25.12.2025) சடலமாக மீட்கப்பட்டவர், நிந்தவூர் 6 தெற்கு வீதிப் பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இஸ்மாலெப்பை இப்றாகீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முதற்கட்ட விசாரனை
துவிச்சக்கர வண்டியில் பசளை ஏற்றிக் கொண்டு வயலுக்குச் செல்வதற்காக பாலத்தின் ஊடாக பயணித்த போது, தவறுதலாக ஆற்றில் பசளை விழுந்துள்ளது.

இதனை மீட்டெடுப்பதற்காக அதிக நீரோட்டம் உள்ள ஆற்றுக்குள் இறங்கிய நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கை
இதனையடுத்து, நீரில் மூழ்கி காணாமல்போனவரின் சடலத்தை தேடுவதற்கு அப்பகுதி நீர்பாசன திணைக்களத்தின் உதவி பெறப்பட்டுள்ளதுடன், நீர்பாசன திணைக்களத்தினர் வான்கதவுகளை மூடி வெள்ள நீரை குறைத்த போது கலிங்கத்தொட்டியில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹீர் விசாரணையை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது நீரில் மூழ்கியமையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக கூறி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam