அயர்லாந்து வரலாற்றின் இருண்ட பக்கம்! பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
அயர்லாந்து- துவாம் நகரில் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளால் நடத்தப்பட்ட முன்னாள் தாய் மற்றும் சேய் இல்லத்தில், ஏற்கனவே 796 குழந்தைகளின் உடல்கள் கழிவுநீர் தொட்டியில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது மயானம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த இல்லத்தின் அருகிலுள்ள விளையாட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட புல்வெளிப் பகுதியின் அடியிலேயே இந்த மயானம் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாவது மயானம் கண்டுபிடிப்பு
அங்கிருந்து தற்போது வரை 11 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெட்டிகளில் (Coffins) வைத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1925 -1961 வரையிலான காலப்பகுதியில் இந்த இல்லம் இயங்கிய போது இந்த அடக்கங்கள் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டில், கேத்தரின் கோர்லெஸ் என்ற உள்ளூர் வரலாற்று ஆய்வாளர், முறையான அடக்க விபரங்கள் இன்றி சுமார் 800 குழந்தைகள் இந்த இல்லத்தில் இறந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் ஒரு பழைய கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் தூக்கி எறியப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதாவது, திருமணத்திற்குப் புறம்பாகக் கருவுற்ற பெண்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தங்களது குழந்தைகளிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
DNA பரிசோதனை பணி ஆரம்பம்
இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அயர்லாந்து அரசு அதிகாரப்பூர்வ மன்னிப்புக் கோரியதுடன், தற்போது அந்த இடத்தைத் தோண்டி உடல்களை மீட்டு, மரபணு (DNA) பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணியைத் தொடங்கியுள்ளது.

இந்த சம்பவம் அயர்லாந்து வரலாற்றின் மிக இருண்ட பக்கமாக பார்க்கப்படுகிறது. முறையான பதிவுகள் இன்றி இத்தனை குழந்தைகள் புதைக்கப்பட்டிருப்பது “ஒரு தேசிய அவமானம்," எனப் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam