தூக்கில் தொங்கிய நிலையில் காத்தான்குடியில் வீடொன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள ஹிஜ்ரா ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்தே குறித்த குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
38 வயதுடைய இக் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் முதல் மனைவி சுகயீனம் காரணமாக மரணமடைந்ததன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இவருக்கு ஒரு பெண் குழந்தையொன்றும் உள்ளதாகவும் முதல் மனைவியின் வீட்டியிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இவர் தனியார் வர்த்தக நிறுவனமொன்றில் நிறைவேற்று முகாமையாளராக கடமையாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

