திருகோணமலை கடற்கரையில் 40 வயதுடைய ஒருவரின் சடலம் மீட்பு!
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடற்கரை பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா - ஆலாங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரின் சடலமே இன்று (08.11.2025) இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள உப்பாறு பாலத்துக்கு கீழ், இருவர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் உபகரணங்களுடன் இருப்பதை அறிந்து, கடற்படையினர் நேற்றிரவு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கடற்படையினர் அருகில் சென்றவேளை, அந்த இருவரும் உபகரணங்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை, ஒருவர் காணாமல் போனதாக ஒருவரால் கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் உப்பாறு பாலத்துக்கு அருகில் 40 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan