திருகோணமலையில் என்பிபி உறுப்பினரொருவர் சடலமாக மீட்பு
திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று( 21) காலை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்பு
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று மாலை (20) தனது வயலுக்கு காவல் காப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தவிசாளர் பிரகாத் தர்மசேன, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால், அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இன்று (21) காலை வயலுக்குச் சென்று தேடியபோது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட பிரகாத் தர்மசேன, அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியில் போட்டியிட்டு கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளராக அதிக வாக்குகளைப் பெற்றுத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திடீர் மரணம்
சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், கோமரங்கடவல பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பொலிஸார், மரணத்திற்கான காரணம் குறித்து கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரணத்தின் பின்னணி மற்றும் அது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முழுமையான தகவல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரகாத் தர்மசேனவின் திடீர் மரணம், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri