செங்கலடியில் காணாமல்போன நபர் காட்டுப்பகுதியிலிருந்து சடலமாக மீட்பு
மட்டக்களப்பு-செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் 12 நாட்களின் பின்னர் வாழைச்சேனை பிரதேச காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செங்கலடியைச் சேர்ந்த 58 வயதுடைய வோலாட்சி சாமித்தம்பி எப்பவரே இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் 27 ம் திகதி வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறிய நிலையில் வீடு திரும்பாத நிலையில், அவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று வாழைச்சேனை முறுத்தானை வயலை அண்டிய காட்டுப்பகுதியில் சடலம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இருப்பதாக அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைக்குச் சென்றவர்களால் வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், கடந்த 27 ம் திகதி காணாமல்போன செங்கலடியைச் சேர்ந்தவர் எனக் கண்டறிந்ததையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
