காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
நவகத்தேகம - அத்துறுபாளயகம பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் 10 வயது சிறுமி பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 21ம் திகதி தனது வீட்டில் தாயுடன் இருந்த போது குறித்த சிறுமி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன சிறுமியை அயலவர்களுடன் இணைந்து அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.
எனினும், சிறுமியை காணாத நிலையில், நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது அந்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.