நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம்
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யட்டவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் இன்று (09.11.2023) காலை கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்தை வந்தடைந்துள்ளது.
இறுதிக்கிரியை
இதன்போது சுஜித் யட்டவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 09 வயது மகன் ஆகியோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன் இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி ஆகியோர் உடன் இருந்தனர்.
உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (11.11.2023) இடம்பெறவுள்ளதாக அவரின் மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam