சுதந்திரபுரம் பகுதியில் வீட்டு கிணற்றில் இளைஞனின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் உயிரிழந்தவரின் வீட்டு கிணற்றில் இருந்து இன்றையதினம்(13.01.2025) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராமத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 11.01.2025 அன்று காணாமல் போயுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அதன் பின்னர் அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்ட நிலையிலும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறான பின்னணியில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam