புத்தளம் கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு (Photos)
புத்தளம் - நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேத்தாப்பொலை கடற்கரைப் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது இன்று(26.08.2023) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழிலுக்கு சென்றவர்கள் சடலமொன்று காணப்படுவதினை அவதானித்த நிலையில் நுரைச்சோலைப் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நுரைச்சோலைப் பொலிஸார் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டதோடு தடவியல் பொலிஸாருடம் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 50 மீற்றர் தொலைவில் இரத்தக்கரைகளுடன் சடலம் காணப்பட்டமையினால், இது கொலையாக இருக்கலாமென்று தடவியல் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நுரைச்சோலைப் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan