வவுனியாவில் அரச ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா(Vavuniya), சேமமடு குளத்தின் வான் பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞர் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணி செய்து வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
நேற்றையதினம் (14) மாலை குறித்த இளைஞர் சேமமடு குளத்தின் ஆற்றுப் பகுதிக்கு சென்றுள்ளதாகவும், நீண்ட நேரமாகிய நிலையில் அவரை காணாமல் நண்பர்கள் தேடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அவரது சடலம் இன்று(15) காலை குறித்த ஆற்றுப் பகுதியில் இருந்து இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளது.

மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற அரச ஊழியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 1 மணி நேரம் முன்
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri