திருகோணமலை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
திருகோணமலை - அலஸ்தோட்டம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆண் நேற்றைய தினம் வீட்டிலிருந்து மாலை சென்றுள்ளதாகவும் அவர் இன்று(15.04.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாம்பல்தீவு - சல்லி வாட்டுபகுதியை சேர்ந்த 38 வயதுடைய ராஜலிங்கம் பிரபாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பிலான விசாரணை
கடற்கரையில் மீக்கப்பட்ட சடலத்தை நீதவான் பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளைவிடுத்துள்ளார்.
அத்துடன் சடலம் பிரேத பரிசோதனைகள் முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பவுள்ளது.
மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam